பிக் பாஸ் ; இனி பிந்து மாதவி (தான்) கவனமாக இருக்கவேண்டும்..!

bindu madhavi - 1

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்னதான் தங்களை கேமரா கண்காணித்துக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தாலும் கூட, அதற்காக தாங்கள் நல்லவர்கள் தான் என்பதை காட்டுவதற்காக நடிக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்பு பொறாமை ஆகியவற்றை பார்க்கும் பார்வையாளர்களான நமக்குத்தான் பகீர் என்கிறது..

அந்தவகையில் இவ்வளவு நாட்களாக யார் மீதும் பொறாமை கொள்ளாமல், எதையும் பட்டென நேரிடையாக பேசிவிடும் குணம் கொண்டவராக இருந்தார் ஓவியா.. இப்போது புதிதாக உள்ளே வந்திருக்கும் பிந்து மாதவியும் ஏறத்தாழ இப்படி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் தான்.

மேலும் பொறாமை, திமிர் போன்ற குணங்களில் இருந்து விலகி நிற்பவர் என்பதுதான் திரையுலகில் அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்லும் விஷயம்.. அதனால் இயல்பாகவே தான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பிந்துமாதவிக்கு நன்றாகவே தெரியும்..

மேலும், ஜூலி, காயத்ரி போன்றவர்களுக்கு வெளியே கிடைக்கும் ‘வரவேற்பு’ என்ன என்பதையும் பார்த்துவிட்டுத்தானே உள்ளே வந்திருக்கிறார்.. வந்த அன்றே ‘பரணி சுவர் ஏறி குதிக்கும்போது என் தடுக்க முயற்சிக்கவில்லை’ என கேட்டாரே ஒரு கேள்வி. அதிலிருந்தும், இந்த ஒரு வாரத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தில் இருந்தும் பிந்துமாதவி இன்னொரு ஓவியாவாகத்தான் வலம் வருவார்.. ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பார் என்றே பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் சுற்றிலும் இருப்பவர்கள் அவரை கார்னர் பண்ண முயற்சிக்கலாம். அதனால் இனி பிந்து மாதவி (தான்) கவனமாக இருக்கவேண்டும்.