பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக பிந்து மாதவி..!

bindhu madhavi

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் களைகட்டிக்கொண்டு இருக்கிறது.. ஐந்து நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் உள்நாட்டு கலாட்டாக்களும், சனி, ஞாயிறுகளில் அந்த சச்சரவுகளை அழகாக பஞ்சாயத்து செய்து கமல் தீர்த்து வைக்கும் விதமும் ரசிகர்களை வேறு நிகழ்ச்சிக்கு தாவ விடாமல் அப்படியே கட்டிப்போட்டு விடுகின்றன.

தற்போது இருக்கும் ஒன்பது நபர்களில் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படாத நிலையில் ‘பிக் பாஸ்’ வீட்டின் புது வரவாக நுழைந்துள்ளார் நடிகை பிந்து மாதவி. இதுவரை பொதுவாக இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் பிக் பாஸ் உறுப்பினர்களில் பிந்துமாதவியும் ஏதாவது ஒரு அணியில் சேர்வாரா..? இல்லை அனைவருக்குமான கருத்து வேறுபாடுகளை மாற்றி அனைவரையும் ஓரணியில் திரட்டுவாரா..? வரும் நாட்களில் பார்க்கத்தானே போகிறோம்.