தெரியுமா சேதி.. பூமிகாவுக்கு ஆண் குழந்தை..!!


‘ரோஜாக்கூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. 2007-ல் தனது யோகா மாஸ்டரான பரத் தாக்கூர் என்பவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட பூமிகா, மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

போகப்போக சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இருந்தாலும் தங்கர்பச்சான் சொன்ன கதையால் கவரப்பட்ட பூமிகா, அவர் இயக்கியுள்ள களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் அல்லரி நரேஷுடன் ‘லட்டு பாபு’ என்ற படத்தில் நடித்தபோது கர்ப்பமாக இருந்தார் பூமிகா.

இரண்டு வாரங்களுக்கு முன் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.. ஆனால் இந்த விஷயம் இப்போதுதான் மீடியாவில் கசிய ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>