‘பெஞ்ச் டாக்கீஸ்’ நடத்தும் டைட்டில் போட்டி..!

குறும்பட இயக்குனர்களுக்கான எதிர்கால தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக, அவர்களுக்கு குறும்படம் மூலம் வருமானம் கிடைக்க வகைசெய்யும் விதமாக கடந்த நவம்பரில் ‘ஸ்டோன் பெஞ்ச் ’ (stone bench) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அதில் ஒரு பிரிவான ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ மூலம் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் ஆறேழு குறும்படங்களை ஒன்றிணைத்து சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்த ஸ்டோன் பெஞ்சில் இன்னொரு பிரிவான ‘பெஞ்ச் டாக்கீஸ்’ மூலமாக திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார்கள். இதற்கான விரைவில் வருகிறது’ போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது ‘பெஞ்ச் டாக்கீஸ்’. ஆனால் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படாததால் அதற்கு பெயர் வைப்பதையே இன்றிலிருந்து ஒரு போட்டியாக நடத்துகிறது