‘நீ சும்மாவே இருக்கமாட்டியா’ – சந்தானத்தை இழுத்து பிடித்த ரஜினி..!

 

“எனக்கென்னவோ ரஜினி சாரோட நடிக்கிறப்ப ஆர்யா, ஜீவாகூட நடிக்கிறமாதிரி ஒரு பிரண்ட்லி பீலிங்” என சந்தானம் சிலாகித்து பேசுகிற அளவுக்கு லிங்கா பட காஸ்ட்யூம்களில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பார்த்த ரஜினியாக யூத் ட்ரெண்டில் இறங்கி அடிக்கிறார் தலைவர்..

ஒவ்வொரு நாளும் வெரைட்டி காஸ்ட்யூமில் வந்து ஸ்பாட்டில் நின்ற ரஜினியிடம், “அப்படியே ஒரு குர்தா போட்டீங்கன்னா, நேரா டெல்லிக்கு போயிடலாம்ணே” என்று சந்தானம் கலாய்க்க, ‘யே.. நீ சும்மாவே இருக்கமாட்டியா”ன்னு செல்லமாக அதட்டிவிட்டு அதை ரசித்து ரசித்து பயங்கரமாக சிரிப்பாராம்..