மார்ச்-29ல் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..!

baskar oru rascal release

பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை தமிழுக்கு தந்த பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அரவிந்த்சாமி, அமலா பால், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக் தான்.

ஹர்சினி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்தநிலையில் தான் டிஜிட்டல் சேவை வழங்குனர்களின் கட்டணக்கொள்ளையை எதிர்த்து புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

இந்தநிலையில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை வரும் மார்ச்-29ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள். தற்போதுள்ள வேலைநிறுத்தம் vவிரைவில் முடிவுக்கு வந்தாலும் வரலாம் என்கிற நம்பிக்கையில் இந்த தேதியை முன்கூட்டியே ரிசர்வ் செய்யும் நோக்கில் அறிவித்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.