“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..!

aravindsamy

அரவிந்த்சாமி நடித்துள்ள படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்க, பேபி நைநிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் மே-11ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திட்டமிட்டபடி ஏப்-27ஆம் தேதி வெளியாகவேண்டிய இந்தப்படம் இரண்டு வாரம் கழித்து வெளியாவது ஏன், இந்தப்படத்தில் நடித்த அனுபவம், அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் விதம் ஆகியவை குறித்து மனம் திறந்து பதிலளித்தார் நடிகர் அரவிந்த்சாமி.

திரையுலக போராட்டத்திற்கு நான் எதிரானவன் அல்ல.. நான் டிவிட்டரில் பதிவிட்டதும் அந்த அர்த்தத்தில் அல்ல. சினிமாவை நம்பி நிறைய தினக்கூலி தொழிலாளர்கள் இருப்பதால் சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என கூறினேன்.. அவ்வளவுதானே தவிர, இதில் உள்நோக்கமோ, எதிர்மறை கருத்தோ எதுவும் இல்லை..

சீனியாரிட்டி அடிப்படையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திற்கு ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் தேதி எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் அவெஞ்செர்ஸ், உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரிலீசாவதால் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அதனால் தான் மே-11ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம்..

என்னைப்பொறுத்தவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன், வில்லனாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் ஒருபோதும் சொல்வதில்லை. தனி ஒருவன் படத்தில் நடிக்கும்போது நானே தனி ஒருவன் என நினைத்துக்கொண்டேன்.. போகன் படத்தில் நானே போகன் என நினைத்துக்கொண்டேன்.. அதனால் கதையும் அதில் எனது கேரக்டரும் பிடித்திருந்தால் போதும்” என்றார் அரவிந்த்சாமி.