ஆர்யா – ராணாவை காசிக்கு அழைத்து சென்ற பாஸ்கர்..!

ரீமேக் படங்களை அப்படியே டிட்டோவாக காப்பியடிப்பது ஒருவகை.. அதில் இன்னும் சில சுவாரஸ்யங்களையும் ட்விஸ்ட்டுகளையும் சேர்த்து புது விருந்து படைப்பது இன்னொரு வகை.. அதனால் தான் ‘த்ரிஷ்யம்’ படம் மற்ற மொழிகளில் ரீமேக்கானதை விட, இந்தியில் சில புது ட்விஸ்ட்டுகளை புகுத்தியதால் ஒரிஜினலை விட சிறப்பாக இருந்ததாக பாராட்டப்பட்டது.

தற்போது ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவாகி வரும் ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கிவரும் ‘பொம்மரிலு’ பாஸ்கர், தமிழில் புதிய சில ட்விஸ்ட்டுகளை புகுத்தியுள்ளாராம். அதில் ஒன்றுதான் படத்தில் நடிக்கும் ஆர்யா, ராணா, சிம்ஹா உள்ளிட்ட சில சில நட்சத்திரங்களை காசிக்கு அழைத்துச்சென்று அங்கே சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வந்துள்ளாராம்.

ஆனால் ஒரிஜினலில் அப்படி ஒரு காட்சியே இல்லை.. ஆனால் புதிதாக சேர்க்கப்பட்டாலும் இது படத்தின் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் காட்சி தானாம். கிட்டத்தட்ட என்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி இருக்கிறதாம்.