டிச-29ல் பறக்க தயாராகும் ‘பலூன்’..!

balloon
ஜெய், அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். 1980களின் பிண்ணனியில், கொடைக்கானலில் இந்தப்படத்தின் கதை நிகழ்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆயுத பூஜை பண்டிகையிலிருந்து இப்போது, அப்போது என ரிலீஸாகும் தேதி மாறி மாறி இதோ இப்போது டிச-29ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறதாம்.