ராஜமௌலியையே பிரமிக்க வைத்த சரித்திரப்பட இயக்குனர்..!

balakrishna

ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்னாவின் 100வது படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது..

தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கிய கிரீஸ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சிறு வயது முதலே இந்த வரலாற்று கதையை கேட்டும் படித்தும் இந்த கதையின் மீது ஒரு ஈர்ப்பு கிரிஷ்க்கு ஏற்பட்டிருக்கிறது… வளர்ந்து இயக்குனரான பிறகு தனது மனதுக்குப் பிடித்த வரலாற்று கதானாயகனான கெளதமி புத்ர சாதகர்ணி வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார்.

இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் இந்த வரலாற்று கதையை படமாக்கவும் நடிக்கவும் ஆர்வமாக இருந்தார் என்.டி.ஆர். கூடி வந்த வேளையில் அரசியல் பிரவேசம் அதற்கு தடை போட்டு விட்டது. அந்த பாக்யம் மகன் பாலகிருஷ்னாவுக்கு கிடைத்து மகுடம் சூட்டப்பட்டது.

‘பாகுபலி’ என்கிற பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமௌலி கூட ஒரு முறை இயக்குனர் கிரிஷ்ஷை சந்தித்தபோது, “எப்படி 80 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்தீர்கள்.. அதுவும் இவ்வளவு போர் சண்டைக்காட்சிகள்.. கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினல் மிருகங்களை வைத்து எடுத்தீர்கள்… ஆச்சர்யம்.. நான் பாகுபலியில் நிறைய கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்கிறேன் நீங்கள் செய்திருக்கிற இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.