கடைசி நேரத்தில் ‘பைரவா’ டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு..!

bairava-issue

மிகப்பெரிய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் சம்பந்தப்பட் நபர்களிடம் இருந்து மட்டுமல்ல, சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்தும் கூட ஏதோ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே ஆகிவிட்டது. குறிப்பாக விஜய் படங்கள் ஒவ்வொருமுறையும் ரிலீசின்போது இப்படிப்பட்ட சங்கடத்தை தவறாமல் சந்தித்து வருகின்றன.

இந்தமுறை நாளை வெளியாக இருக்கும் ‘பைரவா’ படத்திற்கு ‘டைட்டில்’ என்னுடையது என கூறி மேட்டூரை சேர்ந்த பொருள்தாஸ் (பேரை பார்த்தீர்களா..?) என்பவர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சமயத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதை பார்க்கும்போதே வழக்கு தொடர்ந்திருப்பவரின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது..

இவர், நாய் ஒன்றை மையப்படுத்தி கதை எழுதி அதற்கு ‘பைரவா’ என தலைப்பு வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் (கில்டு) பதிவும் செய்திருந்ததாக புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் இதே கருத்தை கூறியுள்ளதோடு, வழக்கை நாளை (ஜன-12) விசாரிப்பதாக ஒத்தி வைத்துள்ளனர்.