‘பைரவா’வுக்காக உருவான கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்..!

bhairava-highlites
விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக் இருக்கிறது. பரதன் இயக்கியுள்ள இப்படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோயம்பேடு போன்று பல லட்சம் பொருட்செலவில், செட் அமைத்து, அதில் 12 நாட்களுக்கும் மேலாக இளைய தளபதி விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது…

இதற்காக 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கடைகள், 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளை கொண்டு ஒரு நிஜ பஸ் நிலையத்தையே கண்முன்னே கொண்டு வந்ததுபோல் இந்த பஸ் ஸ்டாண்டை உருவாக்கியுள்ளார்கள்.

அதேபோல சென்னை பின்னிமில்லில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தவிர பதைபதைக்க வைக்கும் கட்டட பணிகள் நடைபெற்று வரும் 12 மாடி கட்டிடத்தில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சியில் அசத்தி உள்ளாராம் விஜய்.