‘பைரவா’ டீசர் அக்-28ல் ரிலீஸ்..!

bairava-teaser-release

விஜய் நடித்து அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘பைரவா’.. பொதுவாகவே விஜய் தனது படங்களை பொங்கல் தினத்தினறு ரிலீஸ் செய்வதில் தான் ஆர்வம் காட்டுவார் என்பதால், தீபாவளி பண்டிகையன்று அவரது படங்கள் வெளியாவது அரிதிலும் அரிதான ஒன்று.. இந்தமுறையும் அதேபோல விஜய்யின் படம் தீபாவளிக்கு ரிலீசாகவில்லை..

ஆனாலும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நாளை (அக்-28) அதிகாலை 12.01 மணிக்கு ‘பைரவா’ படத்தின் டீசரை வெளியிட இருக்கிறார்கள். நாளை வெளியாகும் ‘கோடி’ மற்றும் ‘காஷ்மோரா’ ஓடும் திரையரங்குகளில் இந்தப்படத்தின் டீசரும் சேர்ந்து திரையிடப்பட இருக்கிறது. பரதன் இயக்கியுள்ள இந்தப்படஹ்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.