அதிக கட்டணம் ; தியேட்டர்களை குறைபட்டுக்கொண்ட பாக்யராஜ்..!

bagyaraj

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் விநாயக், நிதின் சத்யா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடிக்கிறார்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..

இந்தவிழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, “எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள்… குறிப்பாக இளைஞர்கள்… தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்… மொத்தத்தில் நல்ல படமாக எடுத்தால் ஓடத்தான் செய்கிறது.. இந்தப்படத்தின் இயக்குநர் காவியன், எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர். ஆகவே சிறப்பாக பணியாற்றியிருப்பார்..” என்று கூறியுள்ளார் பாக்யராஜ்.