“மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன்” ; சத்யராஜின் முடிவை வரவேற்ற கமல்..!

Kamal - sathyaraj

கர்நாடகாவில் ‘பாகுபலி-2’வை வெளியிட வேண்டுமானால் ஒன்பது வருடங்களுக்கு முன் கன்னடர்கள் குறித்து சத்யராஜ் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என சில கன்னட அமைப்புகள் வலியுறுத்தின. சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் சத்யராஜ். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் என இருவேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன..

இது ஒரு பக்கம் இருக்க, சத்யராஜின் இந்த முடிவிற்கு, கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும் பகுத்தறிவை பின்பற்றி வருவதாக சத்யராஜ் கூறி உள்ளார்.. மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன். சத்யராஜுக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
Attachments area