‘பாகுபலி-2’வுக்கு பிரிட்டிஷ் சென்சாரில் தணிக்கை சான்றிதழ்..!

Baahubali-2 censor

‘எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ படம் நாளை (ஏப்-28) உலகெங்கிலும் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது..

அந்தவகையில் இங்கிலாந்திலும் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் இந்தி பதிப்பிற்கு 2மணி 47 நிமிடங்கள் 26 வினாடிகள் ஓடும் கால அளவுக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு ‘15’ என்கிற தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. பிரிட்டிஷை பொறுத்தவரை ‘15’ என்கிற சான்றிதழ், 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் பார்க்க தகுதியான படம் என்பதற்காக கொடுக்கப்படுகிறது.