முதன்முதலாக 1௦௦௦ கோடி கிளப்பை உருவாக்கிய ‘பாகுபலி-2’..!

Baahubali-2 1000 cr club 1

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் நூறு கோடி வசூலித்துவிட்டால் மாபெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது.. அந்த சாதனையையும் மாபெரும் வியாபர எல்லை கொண்ட பாலிவுட் படங்கள் மட்டுமே செய்துவந்தன.. பின்னர் தமிழ் படங்கள், அதை தொடர்ந்து தெலுங்கு படங்கள் நூறு கோடி கிளப்பை உருவாக்கின.

பின்னர் 2௦௦ கோடி கிளப் உருவாகி, மெதுவாக 5௦௦ கோடி கிளப்பும் உருவானது.. ஆனால் இந்த 5௦௦ கோடி கிளப்பில் முதல் ஆளாக இணைந்தது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் தான்.. இப்போது அதை உடைத்து புதிதாக 1௦௦௦ கோடி கிளப்பை உருவாக்கி பிரமாண்ட சாதனை செய்திருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’..

ஆம்.. படம் வெளியான ஒன்பது நாட்களில் ஒரு தென்னிந்திய படம் உலகம் முழுதும் வரவேற்பு பெற்று 1௦௦௦ கோடி வசூளித்திருப்பதை பாலிவுட் கான் நடிகர்கள் உட்பட ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் பாகுபலி இந்திய சினிமாவின் மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

இந்த வெற்றி பற்றி படத்தின் நாயகன் பிரபாஸ் கூறும்போது, “”மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது. மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.