நட்பையும் காதலையும் புனிதப்படுத்தும் ‘அழியாத கோலங்கள்-2’..!

நான்கே நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி நட்பையும் காதலையும் இதைவிட புனிதப்படுத்திவிட முடியாது என்கிற மாதிரியான ஒரு அருமையான படமாக ‘அழியாத கோலங்கள்-2’ படம் உருவாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து. அதில் அர்ச்சனா நடிப்பதால் அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தாலும் பிரகாஷ்ராஜ், நாசர், ரேவதி என மற்ற கதாபாத்திரங்களும் இந்தப்படத்திற்குள் வந்தபின் படத்தின் தோற்றமே மாறிவிட்டதாம்.

அடிதடி இல்லை…குத்து பாட்டு இல்லை…காமெடி இல்லை. டுயட் இல்லை… இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்… இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே. அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. என்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ் அந்த எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்.. போலீஸ் வேடத்தில் நாசர்., காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார். ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்…

இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி. அர்ச்சனா, ரேவதி, பிரகாஷ்ராஜ், நாசர், இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும் என நம்பிக்கையாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.