தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் ‘அழகு குட்டி செல்லம்’..!

azhagu kutty sellam

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி தயாரித்துள்ள படம் தான் ‘அழகு குட்டி மெட்ராஸ் ரித்விகா, அறிமுக நாயகி கிரிஷா குரூப், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், வினோதினி, ஜான் விஜய், நாராயணன், ஆகியோருடன் ஏராளமான குழ்நதை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை ‘நஞ்சுபுரம்’ சார்லஸ் இயக்கியுள்ளார்.

ஐந்தாறு சிறுவர்கள் ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை ஒன்றை எடுக்கிறார்கள் . அதை தாங்கள் விருப்பப்படி ரகசியமாக வைத்து வளர்க்க முயல்கிறார்கள் அதனால் குழந்தையை இழந்த குடும்பம், அந்த சிறுவர்களின் குடும்பங்கள், ஒரு காதல் ஜோடி, ஓர் ஆசிரியை, மற்றும் சில மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் காமெடி அல்லாத ஒரு குணச்சித்திர வேடத்தில் கருணாஸ் நடித்துள்ளார். அது மட்டுமல, அவரது மகன் கென் இந்தப்படத்தின் மிக முக்கியமான சிறுவர் கதாபாத்திரங்களில் ஒருவராக அறிமுகமாகியுள்ளார். மெட்ராஸ் ரித்விகா இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்

படத்திற்கு இசையமைப்பாளர் வேத் சங்கர் இசையமைத்துள்ளார். இது குழந்தைகள் பற்றிய படம் என்றாலும் இதில் பெரியவர்களுக்கும் நிறைய செய்திகள் இருக்கிறது .படம் ஜனவரி-1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தின ரிலீஸாக வெளிவருகிறது