நள்ளிரவில் வெளியானது கமல் பாடல்..!

கமல் தன் படங்களுக்கு மட்டுமின்றி, தனக்கு பிடித்திருந்தால் வேறு சில படங்களிலும் கூட பாடல்களை பாடுவது நமக்கு தெரியும் தானே. அந்தவகையில் ‘அவம்’ என்கிற படத்திற்காக இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘காரிருளே’ எனத் தொடங்கும் கமல்ஹாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

நேற்று நள்ளிரவு, அல்லது இன்று அதிகாலை இந்தப்பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். காதல் இழப்பையும் அதனால் உண்டாகும் வலியையும் உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளதாம். கௌரவ், கார்த்தி, வில்வா கிரிஷ், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை விஜய் வில்வா கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார்.