வரிசை கட்டும் படங்கள் ; களைகட்டும் ஆகஸ்ட்-11..!

august release films

மிகப்பெரிய திரைப்படங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ரிலீஸாகும் பண்டிகை நாட்களின் பட்டியலில் சுதந்திர தினத்திற்கும் (ஆக-15) முக்கிய இடம் உண்டு.. அந்தவகையில் இந்த வருடம் சுதந்திர தின விடுமுறைக்கு முந்திய வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்-11ஆம் தேதியே வருவதால், நிறைய படங்கள் தங்களது படங்களை இந்த தேதியில் ரிலீஸ் செய்வதில் ஆர்வம் கட்டி வருகின்றன..

தற்போதைய நிலவரப்படி தனுஷ் நடித்து மிகுந்து எதிர்பார்ப்பிற்கு ஆளாகியுள்ள ‘வி.ஐ.பி-2’, உதயநிதியின் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, இயக்குனர் ராமின் ‘தரமணி’, விதார்த் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ மற்றும் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்பு தண்டா’ ஆகிய படங்கள் இப்போதே வரிசைகட்டிக்கொண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டன. ஆக, ஆகஸ்ட்-11 இப்பவே களைகட்ட ஆரம்பித்துவிட்டது.