விஸ்வரூபம் -2, பியார் பிரேமா காதல் இன்று ரிலீஸ்

aug 10 releases

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் எதிர்Kபார்க்கப்பட்ட படம் தான் கமலின் விஸ்வரூபம்-2.. ஒருவழியாக தடைபல கடந்து இன்று (ஆக-10) வெளியாகிறது. அதேபோல பிக்பாஸ் புகை ஹரிஷ்-ரைசா நடிப்பில் இளன் இயக்கத்தில் யுவன் தயாரித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ படமும் இன்று வெளியாகிறது.

கலைஞர் கருணாநிதியின் மறைவை ஒட்டி பட விழாக்கள் எதுவும் நடைபெறாத நிலையில் திரைப்படங்களும் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு படங்களும் இன்று வெளியாகியுள்ளது. இதில் ‘பியார் பிரேமா காதல்’ படம் நேற்றே வெளியாகவிருந்த சூழலில் கலைஞரின் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்டு இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.