‘அட்டகத்தி’ தினேஷ் படத்தை தயாரிக்கும் சி.வி.குமாரின் நண்பர்


பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது வேகமாக வளர்ந்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியுள்ளார். அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்..

இந்த வெற்றிக்கு பக்கபலமாக சி .வி.குமார் தயாரித்த படங்களில் துணை தயாரிப்பாளராக இருந்து வந்தவர் சுந்தர். அவர் தற்போது டைம் லைன் சினிமாஸ் என்ற நிறுவனத்தை தனியாக ஆரம்பித்து தனது முதல் பட தயாரிப்பை தொடங்கியுள்ளார்.

“அட்டகத்தி” புகழ் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஜி. மணிகண்டன் இயக்குகிறார். இப்படத்தில் காளி, எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, கலையரசன், டேனியல், “சூது கவ்வும்” மைமிங் கோபி, “முண்டாசுபட்டி” ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதேபோல திட்டமிட்டபடி படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது.