“நான் ஒன்றும் வில்லி இல்லை” ; அட்டகத்தி நந்திதா..!

attakathi_nandita

மூன்றாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாரை இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட திறமைசாலியான பா.ரஞ்சித்தின் சிஷ்யை என்பதில் அட்டகத்தி நந்திதாவுக்கு எப்போதுமே பெருமை தான்.. அதனுடன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்ததில் கூடுதல் சந்தோசம் நந்திதாவுக்கு.

ஆனால் இந்தப்படத்தில் நந்திதா வில்லையாக நடிக்கிறார் என்று சொல்லப்படும் செய்திகளை அவர் மறுத்துள்ளார்.. படத்தில் தான் வில்லி அல்ல என்றும், படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி இதுவரை யாருமே சொல்லவில்லையே.. அப்புறம் எப்படி இப்படி செய்தி பரவுகிறது என்றும் ஆச்சர்யப்படுகிறார் நந்திதா. இவரும் அட்டகத்தி தினேஷும் நடித்துள்ள ‘உள்குத்து’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.