அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ இன்று துவங்கியது..!

kuruthi aattam (1)

8 தோட்டாக்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதான்யாகியாக நடிக்கிறார். மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘குருதி ஆட்டம்’ ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது. ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த குருதி ஆட்டம் படத்தை தயாரிக்கின்றனர்.