வருட கடைசியில் தனக்கொரு இடம் பிடித்த ‘உள்குத்து’..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து ‘உள்குத்து’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ளது.

‘பிகே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘உள்குத்து’ திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அவை தள்ளிப்போன நிலையில் தற்போது வருவழியாக வரும் டிச-29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே தேதியில் இன்னும் நான்கு படங்கள் ரிலீஸாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.