தலைவர் பிறந்தநாளில் ஆரம்பம் ; ‘தல’ பிறந்தநாளில் வெற்றி கொண்டாட்டம்

 

 

விஜய்வசந்த் நடித்து கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘என்னமோ நடக்குது’ படத்துக்கு தியேட்டர்களில் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அதனால் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி சொல்லும் விதமாக இன்று மாலை சக்சஸ் மீட் நடத்தினார்கள் படக்குழுவினர்.

விழாவில் தயாரிப்பாளர் வினோத், இயக்குனர் ராஜபாண்டி, விஜய்வசந்த், மஹிமா, இந்தப்படத்தின் இசையமைப்பாளரான பிரேம்ஜி உட்பட அனைத்து தொழிநுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக பேசிய விஜய்வசந்த், “இந்தப்படத்தை தலைவர் ரஜினியின் பிறந்தநாளான 12-12-12ல் ஆரம்பித்தோம்.. இதோ இன்று ‘தல’ பிறந்தநாளில் அந்த வெற்றியைக் கொண்டாடுகிறோம்” என சந்தோஷப்பட்டார்.

பிரேம்ஜி பேசும்போது “இதுவரை மொத்தம் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.. இந்தப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ மூன்று பேரின் அடுத்த படங்களுக்கும் நான் தான் இசையமைப்பேன்” என்றவர் “இன்று இரவு ‘தல’ கூட பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கப்போறேனே” என போகிறபோக்கில் சொல்லி அதில் கலந்துகொள்ள முடியாத நம் சாபத்தையும் பெற்றுக்கொண்டார்.