இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அசுரன்..!

asuran

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அசுரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இன்றுமுதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது..

தனுஷ், மஞ்சுவாரியர் முதல்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் வடிவேலு, அஜய்ராஜ், பிரேம்ஜி அமரன், விஜய்வசந்த், வைபவ், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.