லாஸ் ஏஞ்சல்ஸில் ஸ்கை டைவிங் அடித்த அசோக் செல்வன்..!

ashok-selvan-sky-diving

சினிமாவில் சண்டைக்காட்சி, சேசிங் காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்புக்காக டூப் போடும் சில நடிகர்கள் கூட நிஜத்தில் சாகசம் பண்ணவே அதிகம் விரும்புகிறார்கள்.. நம்ம அசோக் செல்வனும் அப்படி ஒரு ஆள் தான்.. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த அசோக் செல்வன் ஸ்கை டைவிங் சாகசம் செய்துவிட்டு வந்திருக்கிறார்..

அந்த அனுபவம் பற்றி பிரமிப்புடன் கூறும் அசோக் செல்வன், இந்த சாகசத்தின்போது ஜேக்கப் என்கிற பயிற்சியாளருடன் சேர்ந்துதான் ஸ்கை டைவிங் செய்தாராம்.. தனது பேவரைட் ஹீரோவான சூப்பர்மேன் போல தன்னாலும் பறக்கமுடிகிறதே என வானத்தில் பறக்கும்போது ஆச்சர்யப்பட்டாராம்.