அசோக் செல்வனை அடையாளம் தெரியாத ரசிகர்கள்..!

தெகிடி படத்தில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், இன்னும் வலுவான ஒரு பிரேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் அசோக் செல்வன். தற்போது பிந்துமாதவியுடன் ‘சவாலே சமாளி’ மற்றும் ப்ரியா ஆனந்துடன் ஜோடியாக ‘கூட்டத்தில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டி.ஜே.ஞானவேல் என்பவர் இயக்கும் ‘கூட்டத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு வேலூரில் உள்ள ஒரு யுனிவர்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் அசோக் செல்வன் தனது தோற்றத்தில் பல மாற்றங்களை செய்து சாதாரணமாக கல்லூரி வந்து செல்லும் மாணவனாக மாறிவிட்டாராம். அதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்களில் பலருக்கு அசோக் செல்வனை அடையாளமே தெரியவில்லையாம். நிவாஸ் பிரசன்னா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.