சந்தானம் படத்துக்கு டைட்டில் வைத்தது ஆர்யா தான்..!

 

சந்தானம் சோலோ ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’.. சந்தானத்தின் நண்பர்களான முருகன், ஆனந்த் என்கிற இரட்டையர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு முதன்முதலில் ‘இனிமே ஹீரோ தான்’ என்று தான் டைட்டில் வைத்திருந்தாராம் சந்தானம்.

ஒருநாள் ஆர்யாவை பார்த்து பேசும்போது, சந்தானம் இந்தக்கதையை சொல்லிவிட்டு, மச்சான் இந்தப்படத்துக்கு இனிமே ஹீரோ தான்னு பேர் வச்சிருக்கேன்” என்று சொன்னாராம்.. “ஏன் மச்சான்” னு ஆர்யா கேட்க, சந்தானமோ ‘இனிமே இப்படித்தான் மச்சான்” என பதில் சொன்னாராம்..

உடனே அதை கப்பென்று பிடித்துக்கொண்ட ஆர்யா, “இனிமே ஹீரோதான்ங்கிற டைட்டில மாத்து.. ‘இனிமே இப்படித்தான்’னு சொன்னியே அதையே டைட்டிலாக வச்சுரு” என்று சொன்னாராம் ஆர்யா. அதன்படி அவர் சொன்னதே படத்தின் டைட்டிலாக மாறிவிட்டது.