எஸ்.ஏ.சி காட்டிய மரியாதையில் நெகிழ்ந்த ஆர்யா..!

naiyappudai teesar release
ஒருபக்கம் ‘கபாலி’, ‘தெறி’ ஆகிய படங்களை தயாரித்துவரும் கலைப்புலி எஸ்.தாணு, இன்னொரு பக்கம் சின்ன பட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் தான் நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். விஜய்கிரன் என்கிற 19 வயது இளைஞர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார்.

இதில் ஆர்யா பேசும் போது, “நையப்புடை டீஸர் பார்த்து அசந்து விட்டேன். எனக்கெல்லாம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது எப்படா இந்த ஃபைட் முடியும் என்று நினைப்பேன். அந்த அளவுக்கு சண்டைக்காட்சியில் நடிக்கும்போது எரிச்சலாக இருக்கும் .ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் இதில் அவ்வளவு உற்சாகமாக சண்டை போட்டு இருக்கிறார். பாராட்டுக்கள். என்னை இந்த விழாவுக்கு அவர் அழைத்தபோது படம், கதை, தயாரிப்பாளர் எல்லாம் சரியாக அறிமுகப்படுத்தி விளக்கி பேசிவிட்டுத்தான் அழைத்தார்.. அவர் வரச் சொன்னால் வரப் போகிறேன். ஆனால் அவர் அழைத்த விதம் அவ்வளவு முறையாக இருந்தது.” என நெகிழ்ந்து கூறினார்.