ஆர்யாவுக்கு ஆதரவு தந்த ஒன்பது பேர்..!

Aarya
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஏற்கனவே ஜீவாவும் நாகார்ஜூனாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது இன்னும் ஏழு பேர் இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ஹன்ஷிகா, காஜல் அகர்வால், தமன்னா மற்றும் ரேவதிதான் அந்த மற்ற ஏழு பேர். இதில் ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் ஆர்யாவுடன் பெங்களூர் டேய்ஸ்’ பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்கள் என்பதும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை தயாரிக்கும் ‘பிவிபி சினிமாஸ்’ தான் அந்தப்படத்தையும் தயாரிகிறார்கள் என்பதும், அந்த நட்புக்காக இவர்கள் அனைவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.