அருண்விஜய் நல்லவரா..? கெட்டவரா….?

 

மங்காத்தாவில் அர்ஜூன் நடிக்கிறார் என்றதும் என்ன சலசலப்பு எழுந்தததோ அதே பரபரப்பு தான் இப்போது அருண்விஜய் விஷயத்திலும் நடக்கிறது. கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித்துடன் முக்கியமான வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் நல்லவரா கெட்டவரா? இந்த கேள்வியை முன்னால் வைத்தால் மர்மப்புன்னகை பூக்கிறார் கௌதம்..

“படத்தில் அவரது கேரக்டர் நல்லது பண்ணுமா, நெகட்டிவா இருக்குமா, இல்ல அஜித்துக்கு நண்பனா?ன்னு இப்ப எதுவும் கேட்காதீங்க.. ஒரு ஹிட் ஹீரோவா பேர்வாங்குன பிறகு அவர் இப்படி ஒரு கேரக்டர் பண்ண ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம்” என்கிறார்.

அருண்விஜய்யின் பிட்னெஸ் பார்த்து வியந்த அஜித், “உடம்பை அட்டகாசமா வச்சிருக்கீங்க.. உங்களை பார்க்கிறப்பல்லாம் ஜிம்முக்கு போகணும்னு தோணுது.. யூ ஆர் மை மோட்டிவேஷன்” என்று பாராட்டினாராம்.