நள்ளிரவில் கார் சேசிங்கில் ஈடுபட்ட அருண்விஜய்..!

kutram 23

அருண்விஜய் நடித்த ‘வா டீல்’ படம் அனைத்து பணிகளும் முடிந்த நிலையிலும் என்ன காரணத்தினாலோ ரிலீஸாக தாமதமாகி வருகிறது.. இந்த நிலையில் அருண் விஜய் அடுத்ததாக ‘குற்றம் 23’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்தப்படத்தில் முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி வருகிறார் இயக்குனர் அறிவழகன்..

அருண்விஜய் வில்லன் ஆட்களை காரில் துரத்தி கொண்டு போகும் ஒரு சண்டை காட்சி இந்தப்படத்தில் இருக்கிறதாம். அந்த காட்சியை தற்போது சென்னையில் நள்ளிரவு ஆரம்பித்து விடியற்காலை வரை படமாக்கி வருகிறார்களாம்.. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் வம்சி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.