அருண் விஜய்யை விடாமல் விரட்டும் வில்லன் வேடம்..!

கசப்பு டானிக்காக இருந்தாலும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அந்த கதாபாத்திரம் பேரும் புகழும் வாங்கி கொடுத்து ரொம்பவே உற்சாகப்படுத்தியது உண்மை தான். அந்தப்படம் அஜித் – கௌதம் மேனன் காம்பினேஷனில் என்பதால், அப்போது மறுக்க முடியாமல் ஒகே சொன்னார் அருண்விஜய். ஒர்க் அவுட்டும் ஆனது.

ஆனால் இங்கே அடுத்து ஹீரோ வாய்ப்புகளில் அருண்விஜய் கவனம் செலுத்த ஆரம்பிக்க, வில்லனாக அழைக்கலாமா என நினைத்தவர்கள் கூட தயங்கினார்கள். ஆனால் கன்னடத்தில் சிவராஜ் குமார் அருண் விஜய்யை அழைத்து தனது படத்தின் வில்லனாக புக் பண்ணினார்.. சரி கன்னடம் மட்டும் தானே என அருண் விஜய் ஒத்துக்கொண்டதும் நாம் அறிந்த கதைதான்.

இப்போது தெலுங்கில் இருந்து வந்திருக்கு மிகப்பெரிய வில்லன் ஆபர்.. ராம்சரண் தேஜா ஹீரோ, சீனு வைத்லா டைரக்சன்.. மாட்டேன் என சொல்ல முடியுமா அருண் விஜய்யால்.. நிச்சயம் இந்தப்படங்கள் எல்லாம் அருண் விஜய்க்கு மற்ற மொழிகளிலும் பிரேக் அப் கொடுக்கும் என்பது உண்மைதான்.. இருந்தாலும்….

அருண் விஜய்யை வில்லனாகவே ஆக்கி விடுவார்களோ..?