அருண்விஜய் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதிய வி.வி.ஐ.பி..!

 

‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்யின் நடிப்பையும் அவரது துணிச்சலான முடிவையும் பாராட்டி திரையுலகில் பலரிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது போக, ஒரு வி.வி.ஐ.பியின் பாராட்டும் அவரை பரவசப்படுத்தியுள்ளது. அது வேறு யாருமல்ல, அஜித்தின் மகளான குட்டிதேவதை அனோஷ்கா தான்.

‘என்னை அறிந்தால்’ படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்தவுடன் அருண்விஜய்யை சந்தித்த குட்டிப்பெண் அனோஷ்கா, ஒரு கடிதத்தை கொடுத்ததாகவும் அதில் “முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள். இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம். என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி’ என்று எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்திற்கு நன்றி கூறி அருண்விஜய் பதில் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது..