மோகன்லாலை தொடர்ந்து அர்ஜுனை இயக்கும் அருண் வைத்தியநாதன்..!

பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து மலையாளத்திலேயே ‘பெருச்சாழி’ என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.

எல்லோரும் உள்நாட்டு அரசியலை படமாக்கி கொண்டிருக்க, இவரோ நம்ம ஊர் அரசியல் ராஜதந்திரங்களை அப்படியே அமெரிக்காவில் புகுத்தினால் அங்குள்ள அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை காமெடி கலந்த புத்திசாலித்தனத்துடன் சொல்லி ரசிகர்களை கவர்ந்தார்.

இப்போது தனது மூன்றாவது படத்தை தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து இயக்குகிறார் அருண் வைத்தியநாதன். அர்ஜுனின் ரெடிமேட் கேரக்டரான போலீஸ் அதிகாரி வேடம் தான் என்றாலும், அதை புதுவிதமாக வடிவமைத்துள்ளாராம். அர்ஜுனை, இதுவரை பார்த்துவந்த வழக்கமான சினிமா போலீஸாக இல்லாமல் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் நிஜ போலீஸாகவே இதில் பார்க்கலாமாம்.