இறுதிக்கட்ட பணியில் அருள்நிதி படம்

arulnithi film

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் இணைந்து நடிக்க சில மாதங்களுக்கு முன்பு பெயரிடப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பு துவங்கியது. எஸ்பி சினிமாஸ் தங்களது இரண்டாவது படமாக தயாரித்துள்ள இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் விறுவிறுப்பான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்

எப்போதுமே தனித்துவமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் அருள்நிதியும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் இந்த படத்தில் நடித்திருப்பது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். பரத் நீலகண்டன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தர்புகா சிவா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இவர்களுடன் யோகி பாபு, காயத்ரி, ரமேஷ் திலக், ‘எருமசாணி’ விஜய், ‘கும்கி’ அஸ்வின், ‘ஜாங்கிரி’ மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்