அருள்நிதி படத்திற்கு ‘U’ சான்றிதழ்..! பொங்கல் தினத்தில் ட்ரெய்லர்..!

 

ஒழுக்கத்தில் முன்மாதிரியாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியம் தருகிறது என கருதும்  நாலு போலீசையும் பற்றிய கதை தான் ‘நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும்’. இந்தப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். காமெடிக்கு சிங்கம்புலியும் பகவதி பெருமாளும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.

வித்தியாசமான தலைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான் தயாரிப்பு நிறுவனங்களின் முதல் டார்கெட்டாக இருக்கிறது. அந்தவகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’,  ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என வித்தியாசமான படங்களைத் தயாரித்தது ‘லியோவிஷன்’ பட நிறுவனம். இவை ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிபெற்று வசூலையும் வாரிக்குவித்தன.

அந்த சென்டிமென்ட்டுடன் இப்போது இந்த நிறுவனம் ஜே.எஸ்.கே நிறுவனத்துடன் இணைந்து புதுமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் இந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர் பொங்கல் அன்று வெளியாகிறது.