பெண்போலீஸாரின் பிரச்சனைகளை அம்பலப்படுத்தவரும் ‘அர்த்தநாரி’..!

இயக்குனர் பாலாவின் பாசறையில் இருந்து வந்தவர் சுந்தர இளங்கோ.. தற்போது இவர் அர்த்தநாரி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அண்டர்கவர் லேடி போலீஸ் ஆபீஸர் ஒருவர் போலீஸ் துறையில் சந்திக்கும் சவால்கள், கெட்டவர்களுக்கு எதிராக துணிந்து போராடும் அவரது துணிச்சல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிவருகிறது. பெண் போலீஸ் அதிகாரியாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ அருந்ததி நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ராம்குமார் நடிக்கிறார்.

சமீபத்தில் காவல்துறையில் வழக்கு விசாரணையில் தனக்கு ஏற்பட மேலிட பிரஷரால் தற்கொலை செய்துகொண்டாரே ஒரு பெண் அதிகாரி, அதுபோல இந்த துறையில் பெண்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளையும் இந்தப்படம் கோடிட்டு காட்டுகிறதாம். குறிப்பாக ‘தனி ஒருவன்’ பாணியில் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டமாக இந்தப்படம் உருவாகிவருகிறதாம். செல்வகணேஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.