அர்ஜூன் படத்தில் இணைந்த பாபி சிம்ஹா-பிரசன்னா..!

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ என இரண்டு படங்களை இயக்கிய அருண்வைத்தியநாதன் இப்போது தனது மூன்றாவது படத்தை தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து இயக்குகிறார் . அர்ஜுனுக்கு ‘நச்’சென்று பொருந்தக்கூடிய கேரக்டரான போலீஸ் அதிகாரி வேடம்..

இந்தப்படத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.. கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இதில் பிரசன்னாவும், வரலட்சுமியும் டிடெக்டிவ் ஏஜெண்டுகளாம். இதுதவிர வைபவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில பிரபலங்களையும் படத்திற்குள் இழுத்துவர திட்டம் வைத்துள்ளாராம் அருண் வைத்தியநாதன்.