‘ராஸ்கல்’ அரவிந்த்சாமியின் புதியமுகம் விரைவில்…!

bhaskar oru rascal - teaser coming poster 1

அரவிந்த்சாமியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் சூடு பிடித்துள்ளதை தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல்

இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் சித்திக் தான், தற்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.