‘பாபநாசம்’ படத்தால் வாய்ப்பு கிடைக்காததில் கௌதமிக்கு சந்தோசம்..!

namathu
மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் ‘நமது’. இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் வருகிற ஆகஸ்ட்-5ல் வெளியாகிறது…

இந்தப்படத்தின் இயக்குனர் இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி ஆந்திராவில் ஏற்கனவே பாப்புலரானவர். அவர் இயக்கிய “ அய்த்தே “ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கி கொடுத்த படம். அவர் கௌதமியை தொடர்புகொண்டு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார்.

“பாபநாசம் படத்தை பார்த்துதான் என்னை நடிக்க கேட்கிறீர்களா என்று நான் இயக்குனரை கேட்டேன்.. ஆனால் அவரோ, நான் பாபநாசம் படம் பார்க்கவில்லை இந்த கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது” என்கிறார் கௌதமி.