நடிகர் சங்க தேர்தல் குறித்த அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த முறை நடந்த தேர்தலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. நாசர்-சரத்குமார் தலைமையிலான இருதரப்பு அணியினரும் மிகவும் ஆக்ரோசமாக போட்டியிட்டு மோதிக்கொண்ட அந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால் அடுத்த தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் இந்த தேர்தலை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் விரைவில் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்றும் தெரிகிறது.