ஆகஸ்ட் 17-ல் அட்டகத்தி தினேஷின் “அண்ணனுக்கு ஜே”..!

annanukku je

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவனமும் 20th பாக்ஸ் செஞ்சுரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே. தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது