ஐந்து வருடமாக தயரான ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்கிரிப்ட்..!

annanukku je (1)

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜ்குமார். .தற்போது ‘அண்ணனுக்கு ஜே’ படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமல்ல அவரது குருவான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில்சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசை அமைத்துள்ளார்.விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார்.எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

தினேஷ் பேசும்போது, “அட்டகத்திக்கு பிறகு மீண்டும் கமர்ஷியல் ரோட்டுக்கு திரும்பியதை இந்தப்படம் மூலம் உணர்கிறேன் என்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் கிட்டத்தட்ட ஐந்து வருட உழைப்பை இந்த ஸ்கிரிப்ட்டில் கொட்டியிருக்கிறோம். .நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.

கதாநாயகி மஹிமா நம்பியார் பேசியபோது, ” வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். .மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன். இதற்கு இயக்குனர் ராஜ்குமாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்” .

தயாரிப்பாளரான இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, ஒரு படம் வெளியாவதற்கு எவ்வளவு பொறுமை காக்க வேண்டும் என்பது இப்போது ராஜ்குமாருக்கும் அட்டகத்தி தினேஷுக்கு புரிந்திருக்கும்.. நிச்சயம் இந்தப்படம் நல்ல வெற்றி பெரும்” என கூறினார்.