அனிருத் விஷயத்தில் சாதித்தார் சிவகார்த்திகேயன்..!

aniruth - siva

சிவகார்த்திகேயன் படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு படத்தின் பாடல்களுக்கு, அதாவது படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் தற்போது மோகன்ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் இந்தப்படத்திலும் அனிருத் இசையே இருந்தால் நன்றாக இருக்கும் என கருதினார். ஆனால் மோன்ராஜாவுக்கோ ‘தனி ஒருவன்’ படத்தில் உடன் பணிபுரிந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியையே மீண்டும் இசையமைக்க வைக்கலாம் என ஒரு எண்ணம் இருந்தது..

ஆனால் எப்படி திடீரென சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது எதிர்பாராத சர்ப்ரைஸாக அவருக்கு அமைந்ததோ, அதேபோல படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தையே ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம். ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கிச்சட்டை’, ‘ரெமோ’ தற்போது மோகன்ராஜா படம் என சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஆறாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.