காதலர் தினத்தை வரவேற்கிறான் ‘அனேகன்’..!

 

பொங்கல் ரிலீஸ் படங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், அடுத்தது ஜனவரி-29ல் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் தான் மெகா ரிலீஸ். இந்தப்படம் வெளியான இரண்டு வாரங்களில் காதலர் தினம் வருகிறதே.. அதை வரவேற்க ஆள் வேண்டாமா..? இதோ தனுஷ்-கே.வி.ஆனந்தின் ‘அனேகன்’ அந்த பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆம்.. காதலர் தின கொண்டாட்டமாக பிப்-13ல் ‘அனேகன்’ படத்தை வெளியிடுகிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.

தனுஷ் ஜோடியாக அமிரா தஸ்தூரும் முக்கிய விதத்தில் கார்த்திக்கும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  தனுஷின் வழக்கமான பாணி படங்களில் இருந்து விலகி, மாறுபட்ட காதல் கதையாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தை காதலர் தினத்திற்கு முதல்நாளே வெளியிடுவது சரியான விஷயம் தான்.