குழந்தைகளை கவர ஆன்ட்ராய்டில் ‘கத்தி’ விளையாட்டு..!

கோச்சடையான், அஞ்சான் படங்களை தொடர்ந்து ‘கத்தி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் 3டி ஆன்ட்ராய்டு விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘கத்தி’ படத்தின் கதாபாத்திரங்களை வைத்து கிராபிக்ஸில் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது இதன் ஐ.ஓ.எஸ் பதிப்பை வெளியிடவும் லைக்கா நிறுவனம் உத்தேசித்துள்ளதாம்.. இதுதவிர ஏற்கனவே இதன் 2டி பதிப்பிற்கான வேலைகளும் முழுவீச்சில் நதைபெர்று வருகின்றதாம். இந்த 2டி கேம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானதாம். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய்-சமந்தா-அனிருத் என கலக்கல் காம்பினேஷனுடன் வரும் இந்தப்படம் தீபாவளி எதிர்பார்ப்பில் முதலிடத்தில் இருக்கிறது.